states

img

ஜம்மு காஷ்மீர்: 4 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அக். 6ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை கால அவகாசம். அக்டோபர் 14ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்படும். வேட்புமனுவை திரும்ப பெற அக்டோபர் 16 கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு அக்டோபர் 24ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாநிலங்களவை தேர்தல் நடக்கும். பிறகு அன்றைய தினம் 5 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.